நடிகைகள் பற்றி வர்ணனை அமைச்சர் டிஸ்மிஸ்
கருத்துகள்
நடிகைகளை அழகு என்று சொன்னதற்கே பதவி போச்சா. ஒருவேளை கிழவிகளை பாராட்டியதால் கவர்ன்மெண்டுக்கு கோபம் வந்துவிட்டதோ? http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=46756 நடிகைகள் பற்றி வர்ணனை அமைச்சர் டிஸ்மிஸ் லக்னோ, ஏப். 15: உத்தரபிரதேச மாநில அரசில் கதர்த்துறை அமைச்சராக ராஜாராம் பாண்டே இருந்தார். அவர் பொது இடங்களில் பெண்களின் அழகை வர்ணிப்பதையே ஒரு பழக்கமாக வைத்திருந்தார். கடந்த வெள்ளிக்கிழமை பிரதாப்கர் என்ற இடத்தில் நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில் பேசும் போது, �நடிகைகள் ஹேமமாலினி, மாதுரி தீட்சித் ஆகியோரின் கன்னங்களை போல பளபளப்பாக சாலைகள் அமைக்கப்பட வேண்டும்� என்று பேசினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அமைச்சரின் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இதைத் தொடர்ந்து, ராஜாராம் பாண்டேவை அமைச்சரவையில் இருந்து முதல்வர் அகிலேஷ் யாதவ் அதிரடியாக நீக்கினார். முதல்வருடன் ஆலோசனை நடத்திய பின் அமைச்சரவையில் இருந்து பாண்டேயை ஆளுநர் பி.எல்.ஜோஷி நீக்கியதாக அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜாராம் பாண்டே ஏற்கனவே, கடந்த பிப்ரவரி மாதம் சுல்தான்பூரில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பேசும் போது அந்த மாவட்டத்து பெண் கலெக்டரை மிக அழகானவர் என்று வர்ணித்தவர் ஆவார். ராஜாராம் பாண்டே நடிகைகள் பற்றி வர்ணனை அமைச்சர் டிஸ்மிஸ் கருத்துகள் 01:21:35Monday2013-04-15 .
No comments:
Post a Comment