வினாத்தாள்கள் பத்திரமாக லாரிகள் (பெரும்பாலும் டீவீஸ் போன்ற நம்பகமான கம்பெனிகள்) மூலம் கட்டுகாப்பாளர்கள் அறைகளுக்கு கொண்டு வரப்படுகின்றன. அதே போல் பதில் தாள்களும் லாரிகள் மூலம் திருத்தும் இடங்களுக்கு கொண்டு செல்லலாம்.. இருபது வருடங்களுக்கு முன்னால் காரைக்குடி தேவகோட்டை ரஸ்தா இடையே பதில் தாள்களை ரயில்வே லைனில் போட்டு அதில் நிறைய மூட்டைகள் சக்கரங்களில் சிக்கி சிதைந்தன. ரயில் ஒரு நிமிடம்தான் நிற்கும். அதற்குள் 400 மூட்டைகளை இறக்குவது முடியாத காரியம். அதனால் நாங்கள் ரயில்வே லைன் ஓரமாக போட்டுக் கொண்டே போனோம் என்று ஆர் எம் எஸ் சொல்லியது. மீண்டும் அதே போல் இந்த வருடம் ஒரு மூட்டை லைனில் விழுந்தது. ஒன்று டாஸ்மாக்கில் காணாமல் போய்விட்டது. எனவே இனி ஆர் எம் எஸ்ஸை நம்பாமல் லாரிகளை கல்வித்துரை பயன்படுத்தலாம்.
காணாமல் போகும் விடைத்தாள்கள்
கருத்துகள்
01:17:54Monday2013-04-15
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=46749
Save Money On Travel
MORE VIDEOS
தேர்வு என்றாலே மாணவர்களுக்கு கடுப்பாகத்தான் இருக்கும். அப்படி இருக்கும்போது கஷ்டப்பட்டு தேர்வு எழுதிய விடைத் தாள்கள் காணமால் போய் விட்டது என்றால் எப்படி இருக்கும். அதிலும் அந்த தேர்வை திரும்ப எழுத வேண்டியிருக்கும் என்று சொன்னால்... நல்லவேளையாக மறுதேர்வு நடக்கவில்லை. தப்பித்தார்கள் மாணவர்கள்.
கடலூர் மாவட்டம். கடந்த 28ம் தேதி. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு புவனகிரி அருகே உள்ள பி.முட்லூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 534 மாணவர்கள் தமிழ் இரண்டாம்தாள் தேர் வெழுதினர். விடைத்தாள்கள் 3 பண்டல்களாக கட்டப்பட்டு, அதே பகுதியில் உள்ள தபால் அலுவலகம் மூலமாக பார்சல் செய்யப்பட்டு, விருத்தாசலம் ரயில் நிலையத்தில் ரயில்வே மெயில் சர்வீஸ் மூலம் அனுப்பப்பட்டது. அங்கிருந்து இரவு மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் திருச்சி மண்டல தேர்வு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டபோது விபரீதம் நடந்தது.
ரயில்பெட்டியின் கதவுகளை சரியாக மூடாததால், ரயில்நிலையத்தில் இருந்து சிறிது தூரத்திலே மூன்று பண்டல்களில் ஒன்று தவறி விழுந்தது. திருச்சியில் மறுநாள் காலை ரயில்வே ஊழியர்கள் பண்டலை இறக்கி வைக்கும் போதுதான் ஒரு பண்டல் குறைவாக இருந்ததை கண்டுபிடித்தனர். உடனே விருத்தாசலம் ஊழியர்களுக்கு தகவல் சொன்னார்கள், ரயில்வே டிராக்கில் விடைத்தாள் கட்டுகளை தேடி அதிகாரிகள் தலைதெறிக்க ஓடினார்கள். ரயில்வே டிராக்கில் விடைத்தாள்கள் சின்னாபின்னமாக சிதறி கிடந்தன. அவை பி.முட்லூர் பள்ளியை சேர்ந்த 357 மாணவர்களின் விடைத்தாள் பண்டல்கள். அடுத்தடுத்து வந்த ரயில்களால் சுக்கு நூறாக கிழிந்த விடைத்தாள்கள் குப்பைகளுடன் சேர்த்து தீ வைத்து கொளுத்தப்பட்டது. சற்று பெரிய அளவில் கிழிந்து கிடந்த விடைத்தாள்களை மூட்டையில் கட்டி ஊழியர்கள் எடுத்து சென்றனர்.
மறு தேர்வு வைக்கப்படுமா என்ற நிலையில் பல்வேறு ஆலோசனைகள் குழப்பங்களுக்கு பின்னர் இறுதியாக தமிழ் முதல் தாள் மதிப்பெண் அடிப்படையில் 2ம் தாளுக்கும் மதிப்பெண் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்தது. மேலும் அஜாக்கிரதையாக செயல்பட்ட 4 அஞ்சல்துறை ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் நடந்த மூன்றாம் நாள். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே சத்தியமங்கலத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் கடந்த 1ம் தேதி 10ம் வகுப்பு பொதுத் தேர்வின் ஆங்கிலம் முதல் தாள் தேர்வு நடந்தது. 221 பேர் தேர்வு எழுதினர். சத்தியமங்கலம் தபால் அலுவலகத்தில் இருந்து அஞ்சலக ஊழியர் சவுந்தர்ராஜன் தனியார் பேருந்து மூலம் செஞ்சி சென்றார். அங்கிருந்து ரயில்வே மெயில் சர்வீசில் விடைத்தாள்களை கொடுக்க திண்டிவனத்திற்கு சென்றுள்ளார். இடையில் எங்கேயோ விடைத்தாள் 2 பண்டல்கள் அடங்கிய பையை அவர் தொலைத்துவிட்டார். ஊழியர் சவுந்தர்
ராஜனை பணியிடை நீக்கம் செய்துவிட்டோம் என தபால் துறையும் எல்லாவற்றுக்கும் அஞ்சல்துறைதான் முழு பொறுப்பு என தேர்வுத்துறையும் ஒதுங்கிக்கொண்டன.
கடலூரை போன்றே மறு தேர்வு நடத்தப்படமாட்டாது என்றும், ஆங்கிலம் 2ம் தாளில் பெறப்படும் மதிப்பெண்தான் ஆங்கில முதல் தாளுக்கு வழங்கப்படும் என தமிழக அரசும் தெரிவித்து தப்பித்துக்கொண்டது. கல்வித்துறை, தபால் துறை, காவல்துறைக்கு மத்தியில் சிக்கிக்கொண்டு மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் அவதிப்பட்டனர். மாணவர்களின் எதிர்காலத்தோடு இப்படியா விளையாடுவது என ஆசிரியர்களும் பெற்றோரும் புலம்புகின்றனர்.
மாணவர்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் விடைத்தாள்கள் தேர்வுத்துறை, தபால் துறையின் அலட்சியத்தால் கீழே விழுந்து நாசமாகியுள்ளது. விடைத்தாள்கள் தவறி விழுந்து சேதமடைந்தது, மாணவர்களை அடுத்த தேர்வுகளுக்கு தயார் செய்ய முடியாத வகையில் மனரீதியாக பாதித்தது என்பதுதான் உண்மை. பொதுத்தேர்வில் பெறப்படும் மதிப்பெண்தான், மேற்படிப்பிற்கு அச்சாரமாக இருப்பதால், அவற்றை கவனமாக பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மதுவால் மறைந்த விடைத்தாள்
விழுப்புரம் சத்தியமங்கலம் தேர்வு மையங்களிலிருந்து விடைத்தாள்களை கொண்டு சென்ற கிராமிய அஞ்சல் ஊழியர் சவுந்தர்ராஜன் விடைத்தாள்களை எங்கே தொலைத்தார் என்பதே அவருக்கு தெரியவில்லை. தனியார் பேருந்து மூலம் செஞ்சி வந்த சவுந்தர்ராஜன் டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்தி விட்டு மீண்டும் திண்டிவனத்துக்கு பேருந்தில் புறப்பட்டார். விடைத்தாள் பண்டல்கள் டாஸ்மாக்கில் தவறியதா? அல்லது பேருந்தில் தவறியதா? என்பதை கூட மதுவின் போதை மறைத்துவிட்டது. தொலைந்து போன விடைத்தாள்களை தேடி 4 தனிப்படைகள் அலைந்து திரிந்தது. ஆட்சியர் சம்பத், எஸ்பி மனோகரன் இரண்டு நாட்களாக முகாமிட்டும் தொலைந்ததை கடைசி வரை கண்டுபிடிக்கமுடியவில்லை.
விடைத்தாள்களை பாதுகாப்பாக கொண்டு செல்வதில் தபால்துறையை மட்டுமே நம்பி இருக்காமல், தமிழக அரசு செயலில் இறங்க வேண்டும். கல்வி மாவட்டங்களில் விடைத்தாள்களை பாதுகாப்பாக கொண்டு செல்லும் தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டும். மேலும் தேர்வு மையங்களிலிருந்து விடைத்தாள்களை தேர்வுத்துறையே அதிகாரிகள், ஊழியர்கள் மூலம் சேகரித்து வாகனங்களில் கொண்டு சென்று உரிய இடத்தில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.