ஏங்க இது உங்களுக்கே நியாயமா இருக்கா? உங்க சம்பளம்
நீங்க பைலட்டா இருந்தா 75000, 80000 னும்,
ஏர் ஹோஸ்டஸா இருந்தா 30000, 40000 மாதத்துக்குன்னும்
நெட்டுல போட்டிருக்கு. பைலட்டாய் இருந்தாலாவது
வண்டியை ஓட்டனும், ட்ராபிக் ஜாம்ல
எல்லாம் சமாளிக்கனும். கொஞ்சம் தப்பு
பண்ணிட்டா மங்களூர் மாதிரி ஆயுடும்.
சும்மா சாக்லேட்டை கொடுக்கறதுக்கு ஆயிரம் ரூபாய்
ஒரு நாளைக்கு அதிகம் இல்லையா? ஸ்டிரைக்கை
வாபஸ் வாங்கிட்டு வேலைக்கு போங்க.
அந்த சாக்லேட்டே ஒரு ரூபாயோ என்னமோதான்.
காட்பரீஸ் சாக்லேட் மாதிரி
அஞ்சு ரூபாய் பத்து ரூபாய் சாக்லேட்டாய் கொடுக்கக்
கூடாதா? எங்க கொடுக்கறது, அதுதான் சம்பளத்துக்கே
எல்லா பணமும் சரியாய் போயிருதே என
ஜெனரல் மானேஜர் முனுமுனுக்கறது கேட்குது.
ஆனால் வண்டியை இப்படி ஓட்டினீங்கன்னு வச்சுக்குங்க...வீட்டுக்குப் போக வேண்டியதுதான்.....லாரி ஸ்டைல்
No comments:
Post a Comment