ஞானமும் வைராக்கியமும்
உனக்கு வாழ்க்கையில் ஒரு குறிக்கோள் இருந்தது.
நீ நூல்களை படிப்பதன்மூலமும் யோகப்
பயிற்சிகளாலும் அறிவினைப் பெற்றாய்.
இப்போது உன்னிடம் சில அபூர்வ சக்திகள்
உள்ளன. உன்னுடைய பேச்சால் மக்கள் கவரப்பட்டு
உன்னிடம் வந்து அவர்களுக்கு ஏற்படும்
மகிழ்ச்சிக்காகவும் குறைந்தது ஏற்பட்ட மன
அமைதிக்காவும் உனக்கு பணத்தை வாரி வழங்க
ஆரம்பித்தார்கள்.
பணம் வர வர நீ முன்னாளில் சாப்பிட்டுக்
கொண்டிருந்த சாதாரண உணவை உன்னால்
சாப்பிட முடியவில்லை. எப்போதும் கூட்டத்தால்
சூழப் பட்டிருந்ததால் இப்போது உன்னால் தியானமும்
ஒழுங்காய் செய்ய முடியவில்லை.
நீ இப்போது நல்ல உயரத்திலிருந்து கீழே விழுந்து
விட்டாய். உன் வைராக்கியத்தை இழந்துவிட்டாய்.
நீ ஏன் உன் வைராக்கியத்தை இப்போதும் கடைப்
பிடிக்கக் கூடாது. உன்னதமான ஆன்ம வாழ்க்கைக்கு
அது மிகவும் உதவுமே. நீ ஏன் கோடிக் கணக்கான
சாதாரண மனிதர்கள் சாக்கடைப் புழுக்கள் போல்
வாழும் இந்த உலகீயமான சாதாரண வாழ்க்கையை
தியாகம் செய்யக்கூடாது. உன்னுடைய ஆன்ம ஞானம்
இந்த உலகச் சந்தோசங்களை காட்டிலும் கோடி மடங்கு
பெரிதன்றோ.
ஸ்ரீ கிருஷ்ணர் "ஆயிரத்தில் ஒருவரே என்னைப்
பற்றி கேள்விப்பபடுகிறார். அவர்களிலும் ஆயிரத்தில்
ஒருவரே என்னைப்பற்றி அறிய முயற்சி
செய்கிறார். அவர்களிலும் ஆயிரத்தில் ஒருவரே
என்னைப்பற்றி அறிய சரியான வழியை தேர்வு
செய்கிறார். அவர்களிலும் ஆயிரத்தில் ஒருவரே
என்னைப்பற்றி அறிந்து சந்தோசத்தை அடைகிறார்கள்.
அவர்களிலும் ஆயிரத்தில் ஒருவரே என்னைப்பற்றி
அறிந்ததை அவர்களிடமே தக்க வைத்துக்கொண்டு
சந்தோசமாகவே இருக்கக் கூடிய வைராக்கியத்தை
பெற்றிருக்கிறார்கள்." என்று சொல்லி
இருக்கிறாரே.
எனவே ஞானத்தை முயலுங்கள்.
அதனை தக்க வைத்துக்கொள்ளும் வைராக்கியத்தையும்
பெறுங்கள்.
கோடிக்கணக்கான சாதாரண மக்களின் நடுவிலே
கோடியிலும் கோடியில் ஒருவனாய் வாழுங்கள்.
No comments:
Post a Comment