மூன்று நாட்களுக்கு முன்னால் நித்யானந்தா
ஒரு டிவி யில் இந்தியா ஒரு ஆன்மீக
இன்குபேட்டர் ஆக உள்ளது என்றார்.
பிரச்னை என்னன்னா ஒரு பண்ணிக்
குட்டியைக்கூட இன்குபேட்டரில் வைத்து
பெரிசாக்க முடியும். ஹிந்து மதத்தின் பிரச்சினையே
அது மிகவும் பழமை ஆகவும் மிகவும் வளைந்து
கொடுக்கக் கூடியதாகவும் மிகவும் பறந்து விரிந்த
தாகவும் கருணை உடையதாகவும் வருவதை
யெல்லாம் அப்படியே ஏற்றுக் கொள்வதாகவும்
உள்ளதுதான். அதனால்தான் மற்ற மதங்கள்
பல்வேறு கால கட்டங்களில் இங்கு வரும்போது
இங்கே ஏற்றுக்கொள்ளப்பட்டு வளரவும்
அனுமதிக்கப்படுகிறது. பொதுவாக ஒரு மத குரு
சில ஆன்மிக எண்ணங்களை படித்து வளர்த்துக்
கொண்டு இங்கே வந்து மக்களுக்குச் சொல்லும்போது
அதை ஏதோ புதிய கருத்துகள் போல் ஏற்றுக்கொள்ளும்
பக்குவம் நம்மிடையே உள்ளது. அதனால்தான் புத்த
ஜைன மதங்கள் போன்றவை இங்கே சுலபமாக
வளர்கின்றன. ஆனால் சில சமயங்களில் தீய
முழு வளர்ச்சி அடையாத அரை குறையான
மதவாதிகள் இங்கே தோன்றி அவர்கள் கருத்துக்களை
நமக்கு சொல்லும்போது நாம் அவைகளையும் வழக்கம்
போல் ஏற்றுக்கொள்கிறோம்.
ஆனால் இந்த மத தலைவர்கள் அவர்களுடைய
தனிப்பட்ட வாழ்க்கையிலேயும் சில ஒழுங்கு
முறைகளை கடைப்பிடிக்கவேண்டும்.
அதனால்தான் ஹிந்து மதம் முதலில் ஒருவன்
பிரம்மச்சாரியாக இருக்க வேண்டும் அதன்பின்
திருமணம் செய்துகொண்டு குழந்தைகள் பெற்று
வளர்த்து உலகக்கடமைகள் முடிந்த பின் உலக
வாழ்க்கையைத் துறந்து சன்யாசம் கொண்டு
வானப்பிரஸ்தம் நிலையை அடைய வேண்டும்
என வலியுறுத்துகின்றன.
நித்தியானந்தா போன்ற ஒரு சிறு பையன்
ஆன்மீக வாழ்க்கைக்கு வரும்போது நம் மக்கள்
அடடா இந்த குழந்தைக்குத்தான் இந்தச் சிறு
வயதிலேயே எவ்வளவு ஞானம் என ஆச்சரிய
படுகின்றன. ஆனால் இருபது வயது இளைஞனின்
உடல் இந்த ஞானத்திற்கு கட்டுப்படாமல்
அட்ரினலின் பிட்யூட்டரி ப்ரோச்டரெட் மற்றும்
இன உணர்வு சுரப்பிகள் அதனதன் அதிகப்படியான
சுரப்பில் இருக்கும். விளைவு இது போன்ற
அவமானம்.
இந்தியாவில் உள்ள மடங்கள் தங்கள்
வருங்கால பீடாதிபதிகளை தேர்ந்து
எடுக்கும்போது சிறு பையன்களாக பன்னிரண்டு
வயதுக்குள் இருக்குமாறு பார்த்துக் கொள்வார்கள்.
காமம் நுழைவதற்குள் காயத்ரி நுழைய வேண்டும்
என்பது பழமொழி. அவர்கள் குறைந்த
சாதாரணமான உணவுகளையே உண்ண வேண்டும்.
சிறிய அளவு வேகவைத்த அரிசி மோருடன் சாப்பிட
வேண்டும். வெங்காயம், பூண்டு, முள்ளங்கி, மசாலா
சாமான்கள் தள்ளுபடி. அதனால் அவர்கள் வளர்ந்து
இளைங்கர்களாக ஆகும் பொது ஒரு இளம்
பெண்ணைக்கண்டால் இனக் கவர்ச்சி உணர்வுகள்
வராத அளவு அவர்கள் உடலால் தளர்ந்து போய்
இருப்பார்கள். பாசிப்பயரோ கோழிக்குஞ்ஜோ
உள்ளே செல்லும்போது அது ப்ரோட்டீனுக்கான
வேலையைத்தான் செய்யும்.
சில நண்பர்களோடு ஒரு மடத்துக்கு கொஞ்ச
நாள் முன்பு சென்றிருந்த போது புதிதாய் தேர்ந்து
எடுக்கப்பட்டிருந்த இளைய பீடாதிபதியை
காண்பித்தார்கள். ஆனால் அந்த பையனோ
எங்களைப் பார்த்ததும் (நாங்கள் எல்லோரும்
பெரிய மீசையும் உயரமும் பருமனுமாய்
பயமுருத்துவதுபோல் இருந்தோம் போலும் )
(பொதுவாக டிரைவர்கள்,போலீஸ்காரர்கள்,
பேங்க் ஊழியர்கள் பெரிய மீசையோடு
இருப்பார்கள். அது என்ன லாஜிக் என்று
தெரியவில்லை.)
தூக்கிவாரிப்போட்டு பின்னால் விழப் பார்த்தார். அந்த
அளவு அவர் சிறு குழந்தை யாய் கொஞ்ச வேண்டும்
போல் சிறு பையனாய் இருந்தார்.
எனவே மனதுக்கும் உடம்புக்கும் சண்டையை
உண்டாக்காதீர்கள். தோல்விதான் முடிவாக
இருக்கும்.