பேய் முழி முழிங்க டிவி சீரியல்ல நடிங்க:
கொஞ்ச நாள்ல தினத்தந்தில இப்படி ஒரு விளம்பரம் வரலாம். டிவி சீரியலில் நடிக்க பெண்கள் தேவை. பேய் முழி முழிக்க தெரிந்திருக்க வேண்டும். வாய் கோணியிருக்க வேண்டும். கண்கள் கின்னஸ் ரிகார்ட்களில் வரும் அளவு முழிக்க தெரிந்திருக்க வேண்டும்.
சன் டிவில வர்ற இதயம் சீரியல் நளினியும் அதோட பொண்ணும், திருமதி செல்வம் சீரியல் வடிவுக்கரசி மருமகள், தங்கம் சீரியல் இளவஞ்சி, கொஞ்சம் வித்தியாசமா கோலங்கள் சீரியல்ல பெண்களுக்குப் பதிலா ஆதிங்கிற அந்த காரக்டர் னு எல்லோரும் ஒரே மாதிரி பேய் முழி முழிக்கிறதும் வலிப்பு வந்த மாதிரி வாயைக் கோணிக் கொள்வதும் தாங்கமுடியலடா சாமி.
இதுல நீலிமாராணி ன்னு ஒரு பொண்ணு. அது பொறக்கும்போதே அதோட அப்பா அம்மாவுக்கு தெரியும் போல இது பேய் முழி முழிக்கத்தான் பொறந்திருக்குன்னு. நீலிங்கறது காளியோட ஒரு பேரு. காளி அழிக்கிறவளா ஆகும்போது அவளுக்கு நீலின்னு பேரு. நீலிக்கண்ணீர் அப்படின்னு ஒரு வட்டாரச்சொல் இருக்கு. ஏமாற்றுவதற்காக அழுதால் அந்த பேரு.
சரி இவங்கல்லாம் போனா போறாங்க. நம்ப மயூரி சுதா சந்திரனும் இப்ப இதே மாதிரி கண்ணுல மையை அப்பிகிட்டு, எக்சிபிசன்ல வாங்கின அலுமினிய சாமான்களை காது மூக்கில எல்லாம் மாட்டிக்கிட்டு ஜம்கி வொர்க் சேலைகளைக் கட்டிக்கிட்டு அதே மாதிரி முழிக்கிறதுதான் வருத்தமா இருக்கு.
இப்ப கொஞ்ச நாளா இப்படி சீரியலா பாத்து பாத்து அம்மா, மாமியார்,பொண்டாட்டி,தங்கச்சின்னு அவ்வளவு பேரும் அதே மாதிரி முழிக்கிறது அதைவிட ரொம்ப கஷ்டமா இருக்கு..