Friday, January 21, 2011
makarajyothi scandal
Monday, January 17, 2011
சபரிமலை பயனம் தேவையா
நாங்கள் முப்பது பேர் பல வருடங்களாக சபரிமலை சென்று வருகிறோம். எங்களுடைய பொருளாதார மற்றும் உத்யோக நிலையையும் அதன் மாற்றங்களையும் அட்டவணையாக கொடுத்துள்ளேன்.
வரிசை எண் ..... முன்னர் நிலை ........தற்போதைய நிலை
1 க்ளெர்க் ...............க்ளெர்க்
2 பிஸினெஸ் ........... பிஸினெஸ்
3 ........................ரிக்ஸாஓட்டுபவர்..ரிக்ஸா ஓட்டுபவர்
4 ரிக்ஸாஓட்டுபவர்..ரிக்ஸா ஓட்டுபவர்
5 பிஸினெஸ் ............ வீட்டில் ஓய்வு
6 க்ளெர்க்............. க்ளெர்க்
7 ........................தட்டுவண்டிஓட்டுபவர்..ரிக்ஸா ஓட்டுபவர்
8 ........................ பிஸினெஸ்............ ஆட்டோக்காரர்
9 ....................... ஆட்டோக்காரர் ......வீட்டில் ஓய்வு
10 .................... ஆட்டோக்காரர்........டூரிஸ்ட் டாக்ஸி
11 .................... ஆபிஸர் ....................வீட்டில் ஓய்வு
12 ,.................. க்ளெர்க் ................பணி நீக்கம்
13...................... க்ளெர்க்.................க்ளெர்க்
14 .................. ஆட்டோக்காரர்........மரணம்
15............... க்ளெர்க்.................வீட்டில் ஓய்வு
16 .................. க்ளெர்க்.................டூரிஸ்ட் டாக்ஸி
17................... ரிக்ஸாஓட்டுபவர் ..தட்டு வண்டி ஓட்டுபவர்
18 ................. ரிக்ஸாஓட்டுபவர்.. வீட்டில் ஓய்வு
19.................. பிஸினெஸ்..................பிஸினெஸ்
20 .............. க்ளெர்க் ................க்ளெர்க்
21 .............. க்ளெர்க்..................வீட்டில் ஓய்வு
22................. டூரிஸ்ட்டாக்ஸி.....மரணம்
23 ............. ரிக்ஸாஓட்டுபவர் ..வெளி நாட்டில்
24 ................... க்ளெர்க் .................க்ளெர்க்
25 ..................... ஆட்டோக்காரர் ........வீட்டில் ஓய்வு
26................ பிஸினெஸ்..................பிஸினெஸ்
27 ............... க்ளெர்க் .................ஆபிஸர்
28 .................. க்ளெர்க் .................க்ளெர்க்
29 ................... ரிக்ஸாஓட்டுபவர்...ரிக்ஸா ஓட்டுபவர்
30................. பிஸினெஸ்................. பிஸினெஸ்
ஆக இவர்கள் யாருமே ரொம்பவும் பிரமாதாமாக வளர்ந்து விடவில்லை. எல்லோருமே சராசரியாய் எல்லோருக்கும் நடப்பதைத்தான் சந்தித்துக் கொண்டு உள்ளனர். இதில் ரிக்சா இழுக்கும் நண்பர்கள் பொருளாதார ரீதியாய் மற்ற நண்பர்களால் உதவி செய்யப்பட்டு ஒரு கம்பெனிக்காக (சரண கோஷம் போட வேகமாய் நடக்க உதவ) எங்களால் கூட்டிச் செல்லப்படுபவர்கள்தான்.
அதுவும் மகர ஜோதி போன்ற நாட்களில் யாருமே ஸ்வாமி தரிசனம் செய்யாமல் திரும்பியதும் உண்டு. மகர ஜோதி என்பது விஞ்ஞான பூர்வமாய் என்ன என்பது நம் சாமிமார்கள் அனைவருக்குமே தெரியும்.
எனவே நாம் ஒன்று செய்யலாம். மகர ஜோதி விஸு மாத ஆரம்பம் போன்ற கூட்ட நாட்களில் போகாமல் இருக்கலாம். அல்லது இன்னும் ஒரு படி மேலே போய் நாமே ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு ஐயப்பன் கோவில் கட்டிக் கொள்ளலாம். ஐம்பொன் விக்ரகங்கள் கும்பகோணம் ஸ்வாமிமலை ஸ்தபதிகளிடம் வாங்கிக்கொள்ள முடியும். நம்மூரில் கல் விக்கிரகமாக உள்ளது அங்கே ஐம்பொன்னாக உள்ளது. அதுதானே வித்தியாசம். அதனால். திருச்சி காரைக்குடி ரோட்டில் திருமயம் தாண்டி கொசப்பட்டி என்ற ஊரில் பதினெட்டுப்படி வடக்கு பக்க பொதுப் படி எல்லாம் வைத்து அதேபோல் கட்டியுள்ளனர் நம் சாமிகள். அதுபோல் நாமும் செய்து கும்பிடலாம்.
கேரளக்காரர்கள் நமக்கு ஒரு வசதியும் செய்து தரப் போவதில்லை. அவர்களுக்கு பணம் ஒன்றே குறி. அந்தப் புல் மேட்டுப்பாதை எவ்வளவு மோசமானது. ஒருமுறை எங்களில் ஒரு பெரியவர் கால் தடுக்கி விழுந்து காலை ஒடித்துக் கொண்டார். இது போல் பேப்பரில் வராத செய்திகள் ஒவ்வொரு குழுவிலும் இருக்கும். பம்பா டூ சன்னிதானம் பாதையில் இதுபோல் நேர்ந்தால் சாவு எண்ணிக்கை ஆயிரத்தில் இருக்கும். சிறிய வெட்டுபடிகள், முண்டுப்பாறைகள், களிமண் சருக்கல்கள் என ஆயிரம் உள்ளன.
உண்மையில் சொல்லப்போனால் சாமி தரிசனமோ ஜோதி தரிசனமோ அல்ல நம்மை அங்கே இழுப்பது. மாலை போட்டதும் இங்கே கிடைக்கும் "சாமி சரணம்" மரியாதை, காலை மாலை இருவேளையும் குளிப்பதால் ஏற்படும் அனுபவம், கட்டுப்படுத்திகொள்ள முடியாதவர்களுக்கு விரத காலத்தில் உண்டாகும் கட்டுப்பாட்டால் ஏற்படும் மனம் மட்டும் உடல் சம்பந்தமான ஆரோக்கியம், பயணத்தின் போது நமக்கு ஏற்படும் காடு, மேடு, அடர்ந்த மரங்கள் போன்ற அனுபவங்கள், (நம்மூரில் பத்துக் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள புளிய மரத்தை இங்கே இருந்தே பார்க்க முடியும், அங்கே பத்தடி தூரத்தில் உள்ளது புதர் மறைத்து தெரியாது போன்ற அனுபவங்கள்.)
எனவே கூட்ட நாட்களில் செல்லாதீர்கள். இங்கேயே ஒரு கோவிலைக் கட்டி ஐயப்பன் புகழ் பாடுவோம். இயற்கை வலுத்த வேறு இடங்களுக்கு செல்வோம். தலைவனை இழந்து நிற்கும் அந்த 109 குடும்பங்களை எண்ணிப் பார்ப்போம்.
சுமோ குவாலீஸ் மெட்டடோர் மரணங்கள் சேர்க்கவில்லை. லாரிக்காரங்கதான் எங்கேன்னு அலையிறாய்ங்களே...
விக்கிமேப்பியா வில் போய் பார்த்தேன். பொன்னம்பல மேடு ஒரு பெரிய பொட்டலாய் உள்ளது. மகர விளக்கு மேடை என்றே ஒரு இடம் உள்ளது. அங்கே போய் நின்று கொண்டு சிவகாசியிலிருந்து வாங்கிவந்த ஒரு வாணத்தை போடுவது ஒன்றும் கடினமில்லை.
Thursday, January 13, 2011
loud speakers menace
When the month of margazhi (thanur masam) (15th December to 15th January) comes headache also
comes to the common man in Tamilnadu. Whether it is the condition of other states of India or not condition is becoming worst day by day in Tamilnadu. Each and every temple will make maximum
air pollution by putting the loudspeakers to cry at their maximum volume. Even a Ganesha (elephant
God) under a neem tree will also produce sound pollution by tiding a cone loudspeaker at the top of the
tree so that the sound can reach at least one kilometer.
The condition of students who are preparing for their half yearly examination is very pathetic. When they arise by putting an alarm at 4'o clock the mp3 player operator is also arising at 4'o clock
and make the speakers to cry. (they are also having their own alarms I think) Old people cannot sleep
at this high pitch of sound.
As each and every small temples are also having their own music system each street is having at least one or two loudspeakers. If Vishnu shasranamam is coming from one speaker Subrabatham is
coming from the second and songs of Lord Ayyappa from the third M.S.'s Margazhi Thingal from the fourth and S.P.B.'s namasivaya.......namasiva........ So a super mixed sound is coming in final and one cannot even enjoy the music even if he thinks “After all we have lost our sleep
let us enjoy the music at least.” Sitting in the bed one can blinking at the walls,that's all.
“Manaththukkan masu ilan athal
anaiththu aran akula neera pira”
மனத்துக்கன் மாசிலனாதல் அனைத்தறன்
ஆகுல நீரபிற.
“Have a pure mind must be the ultimate goal
All others are only sound making nonsenses.”
2000 years back,during his period, there was no mike,amplifier,speaker etc. During those times
people will take bath at early hours, wear clean dresses, singing devotional songs and dancing they will walk in the streets.(particularly during this month). Hare Rama Hare Krishna Movement has come out from this Bhajan system. This bhajan is done in villages and in agraharams of towns by Brahnmins even now. But today what is happening is people are sitting inside a room, tide a speaker
at 50 foot hight, cries at 10000 watts PMPO that's all.
Monday, January 10, 2011
american citizen or african citizen
சொன்னா நம்ப மாட்டீங்க. என் உறவுகளில் பதினாறு குடும்பத்தில் உள்ள பையன்கள் இப்போது அமெரிக்காவில் உள்ளனர். பெற்றோர்கள் இங்கே வயதான காலத்தில் தடுமாறிக்கொண்டு இருக்கிறார்கள். அதில் மூன்று பெற்றோர்கள் சென்னையில் ஓல்டு ஏஜ் ஹோமில் உள்ளனர். இரண்டு கோவையில் ஓல்டு ஏஜ் ஹோமில் செட்டில்டு. இந்த குழந்தைகள் எல்லாம் எல்.கே.ஜி முதல் இன்ஜினியரிங்க் காலேஜ் வரை யுனிஃபாம் மாட்டி விட்டு மெட்ரிகுலேசன் அல்லது சி.பி.யெஸ்.சி க்கு வேன்களில் அனுப்பப்பட்ட கூட்டம்தான். இரண்டு குடும்பம் மட்டும் பசங்களை உள்ளூர் ஸ்கூலிலேயே படிக்கவச்சு பக்கத்திலேயே காலேஜுக்கும் அனுப்பி (பசங்க 30,40 மார்க்குக்கு மேலே வாங்கலே, அது வேறே விஷயம்) இப்போ ஒருத்தன் வாத்தியாரா இருக்கான், இன்னொருத்தன் பேங்கிலே இருக்கான். ஆனால் இரண்டு பேருமே அம்மா அப்பாவை கூடவே வைத்துக்கொண்டு உடம்பு முடியாதபோது பக்கத்திலேயே ஏதாவது பாலி கிளினிக்கில் வைத்துப் பார்த்துக் கொள்கிறார்கள். அமெரிக்கன் கோஸ்டிகளோட பெற்றொர்கள் அப்பல்லோவில் போய் படுக்க முடிகிறது. அது ஒன்றுதான் வித்தியாசம். ஆக நீங்க அமெரிக்கன் சிட்டிஜன்னா இருக்கீங்களா இல்லே ஆப்ரிக்கன் சிட்டிஜன்னா இருக்கீங்களா நீங்களே முடிவு பண்ணிக்கோங்க.



