சொன்னா நம்ப மாட்டீங்க. என் உறவுகளில் பதினாறு குடும்பத்தில் உள்ள பையன்கள் இப்போது அமெரிக்காவில் உள்ளனர். பெற்றோர்கள் இங்கே வயதான காலத்தில் தடுமாறிக்கொண்டு இருக்கிறார்கள். அதில் மூன்று பெற்றோர்கள் சென்னையில் ஓல்டு ஏஜ் ஹோமில் உள்ளனர். இரண்டு கோவையில் ஓல்டு ஏஜ் ஹோமில் செட்டில்டு. இந்த குழந்தைகள் எல்லாம் எல்.கே.ஜி முதல் இன்ஜினியரிங்க் காலேஜ் வரை யுனிஃபாம் மாட்டி விட்டு மெட்ரிகுலேசன் அல்லது சி.பி.யெஸ்.சி க்கு வேன்களில் அனுப்பப்பட்ட கூட்டம்தான். இரண்டு குடும்பம் மட்டும் பசங்களை உள்ளூர் ஸ்கூலிலேயே படிக்கவச்சு பக்கத்திலேயே காலேஜுக்கும் அனுப்பி (பசங்க 30,40 மார்க்குக்கு மேலே வாங்கலே, அது வேறே விஷயம்) இப்போ ஒருத்தன் வாத்தியாரா இருக்கான், இன்னொருத்தன் பேங்கிலே இருக்கான். ஆனால் இரண்டு பேருமே அம்மா அப்பாவை கூடவே வைத்துக்கொண்டு உடம்பு முடியாதபோது பக்கத்திலேயே ஏதாவது பாலி கிளினிக்கில் வைத்துப் பார்த்துக் கொள்கிறார்கள். அமெரிக்கன் கோஸ்டிகளோட பெற்றொர்கள் அப்பல்லோவில் போய் படுக்க முடிகிறது. அது ஒன்றுதான் வித்தியாசம். ஆக நீங்க அமெரிக்கன் சிட்டிஜன்னா இருக்கீங்களா இல்லே ஆப்ரிக்கன் சிட்டிஜன்னா இருக்கீங்களா நீங்களே முடிவு பண்ணிக்கோங்க.
Showing posts with label computer boys. Show all posts
Showing posts with label computer boys. Show all posts
Monday, January 10, 2011
american citizen or african citizen
Labels:
america,
c.b.s.c,
computer boys,
i.t.jobs,
matriculation,
old age homes
Subscribe to:
Posts (Atom)